நீங்கள் பாகிஸ்தானில் விளையாடுவதை நாங்கள் காண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு அழைப்பு விடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேப்டன் விராட் கோஹ்லிக்கு இந்தியாவை தவிர உலகத்தின் பல நாடுகளில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்தியா கேப்டன் விராட் கோஹ்லியின் பெரிய ரசிகராக இருப்பார் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. அவர் தன் டிவிட்டரில் கோஹ்லியை அணுகி, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.