திருப்பதி பிரமோற்சவத்தின் 7வது நாள் சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை, தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான மக்கள். ‘கோவிந்தா’ முழக்கமிட்டு, அவரை தரிசித்தனர்.

பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று, மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் காலை 7 மணிக்கு ரதத்திலும், இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தி்லும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நாளை காலை தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு, ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது. மாலையில் வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவ கொடி இறக்கப்பட உள்ளது.

Related Stories: