வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்? : ஹெய்ன்ஸ், சிம்மன்ஸ் போட்டி

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியின் தலை மை பயிற்சியாளர் பதவிக்கு ஹெய்ன்ஸ், சிம்மன்ஸ் உட்பட 3 பேர் இடையே போட்டி நிலவுகிறது. வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணிக்கு தற்போது பிளாயட் ரீபர் தற்காலிக தலைமை பயிற்சியாளராக உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கெனவே தலைமை பயிற்சியாளராக இருந்த ரிச்சர்டு பைபசை நீக்கிவிட்டு இவரை நியமித்தனர். இந்தநிலையில் நிரந்தர தலைமை பயிற்சியாளரை நியமிக்க வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல முன்னாள் வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவற்றை பரிசீலித்த நிர்வாகம் முன்னாள் வீரர்கள் டெஸ்மன்ட் ஹெய்ன்ஸ், பிலிப் சிம்மன்ஸ், பிளாயட் ரீபர் ஆகியோரது பெயர்களை இறுதி செய்துள்ளது. அனுபவம் மிக்க முன்னாள் வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் 3 பேரில் யார் தேர்வானாலும் சிறந்த தேர்வாக இருக்கும் என்று  வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் தலைவர் ரிக்கி ஸ்கெர்ரிட் தெரிவித்தார்.

1980-களில் வெஸ்ட் இன்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹெய்ன்ஸ்சுக்கு  தற்போது 63 வயது ஆகிறது.   116 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7487 ரன் குவித்துள்ளார். 238 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று 8648 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதாகும் சிம்மன்ஸ்சும் தொடக்க ஆட்டக்காரர்தான். 26 டெஸ்ட் போட்டிகளிலும் 143 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த  அனுபவம் இவருக்கு உள்ளது. நேர்முக தேர்வின்போது 3 பேரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார்.

Related Stories: