விளையாட்டு துளிகள்

* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (25 டெஸ்டில் 1741 ரன்), வீரேந்திர சேவக் (15 டெஸ்டில் 1306 ரன்), ராகுல் டிராவிட் (21 டெஸ்டில் 1252  ரன்) ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் இடம் பிடிக்க, கோஹ்லிக்கு இன்னும் 242 ரன் மட்டுமே தேவை. அவர் இதுவரை 9 டெஸ்டில் 758 ரன் எடுத்துள்ளார்.

* சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களில் வென்று ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் வென்றால் புதிய சாதனை படைக்கலாம்.

* 2013ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் விளையாடிய எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியதில்லை.

* இந்தியா: ரோகித் ஷர்மா, மயாங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரகானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி.

* தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி (கேப்டன்), தெம்பா பவுமா, தியூனிஸ் டி புருயின், குவின்டான் டி காக், டீன் எல்கர், ஸுபேர் ஹம்ஸா, கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், செனூரன் முத்துசாமி, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெர்னான்  பிலேண்டர், டேன் பியட், காகிசோ ரபாடா, ரூடி செகண்ட்.

Related Stories: