அரியானா தேர்தல் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கட்சியில் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சீட்

புதுடெல்லி: அரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், ஆளும் பாஜ கட்சி முதற்கட்டமாக 78 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை நேற்று  வெளியிட்டது.     தற்போது அமைச்சராக உள்ள விபுல் கோயல், ராவ் நர்பிர் சிங் உட்பட 7 எம்எல்ஏக்கள் இடம் பெறவில்லை.  மற்ற 38 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த சில  வாரங்களுக்கு முன் கட்சியில் சேர்ந்த விளையாட்டு வீரர்களான மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்  யோகேஸ்வர் தத் ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது. கடந்த 2014 தேர்தலில் மோடி அலையால், பாஜ கட்சி 47 தொகுதிகளில் வென்று அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.  முதல்வர் கட்டாரை எதிர்த்து, ராணுவத்தில் உணவு சரியில்லை என்று புகார் எழுப்பிய முன்னாள் வீரரான தேஜ்பகதூர் யாதவ் சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.

Related Stories: