அண்ணா பல்கலை விவகாரம் திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்: அனைவரும் பங்கேற்க அழைப்பு

சென்னை: அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.தமிழகத்தில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.  இது தொடர்பாக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் பகவத் கீதையை தடுத்து நிறுத்தி கல்விமுறையை பாதுகாக்க, இந்தி திணிப்பை தடுக்க, புதிய தேசிய கல்விக் கொள்கை-2019 என்ற பெயரில் மாணவர்களின் உரிமைகள் பறிப்பை தடுத்து நிறுத்திட  சென்னையில் திமுக மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டமம் ஒன்றை நடத்தவிருக்கிறது. திமுக தலைவர் அழைக்கிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் புடம் போடப்பட்ட திமுக மாணவரணியினரே, அண்ணா பல்கலைகழகம் பாடத்தில் இருந்து  பகவத் கீதையை வாபஸ் பெறும் வரை வங்ககரையோரம் மாணவர்கள் குவிந்து நிற்பார்கள். கட்சி தலைவரின் ஆணைக்கேற்ப அக்டோபர் 1ம் தேதி நாளை அண்ணா பல்கலை கழகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் திரண்டு வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: