ஜகர்தா: இந்தோனேசியாவின் சேரம் தீவை தாக்கிய 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 6.46 மணியளவில் மாலுக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.