டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் நீக்கம்: விசிக, எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்மொழி நீக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திருமாவளவன் (விசிக):  டி.என்.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுப் பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழிப்பாடத்தை முற்றிலுமாக  நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழ்வழி மாணவர்களை வடிகட்டுவதற்கான முயற்சியே ஆகும்.   எஸ்.டி.பி.ஐ. கட்சி: தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, தமிழக அரசு தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையத்தின் புதிய தேர்வு பாடத்திட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: