நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மேலும் 2 மாணவர்களிடம் தேனியில் விசாரணை

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக  கைது செய்யப்பட்ட மேலும் 2 மாணவர்கள் மற்றும் அவரது தந்தைகளும் தற்போது தேனி அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த நிலையில், ஏற்கனவே மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தேனியில் இருக்கின்ற நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மதுரையில் உள்ள சிறைச்சாலையில் அடைத்தனர். இதில் சிபிசிஐடி எஸ்.பி. நேரடியாகவே இந்த விசாரணை முழுவதுமாக நடத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில் ஏற்கனவே மாணவர் உதித் சூர்யாவிடம் விசாரணை நடத்தியதில் அவருடன் சேர்ந்து மாணவர்கள், நண்பர்கள் பலர், இதேபோல் நீட் தேர்வில் முறைகேடாக நடத்தி சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரியில் படிக்கின்ற பிரவீன் , ராகுல் மற்றும் அபிராமி ஆகிய 3 மாணவர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசார் தற்போது தேனி அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற உள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதுதொடர்பாக 2 இடைத்தரகர்களும் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்தார்.

Related Stories: