மன்மோகன் சிங்குக்கு 87வது பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004ம் முதல் 2014ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர், மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் சிறப்பாக செயலாற்றியவர். இவர் நேற்று தனது 87வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘87வது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்திக்கிறேன்,’ என்று பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் டிவிட்டரில் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தனது வாழ்த்து செய்தியில், ‘சோதனையான கால கட்டத்திலும் அவரது புத்திக்கூர்மையுடனான தலைமையின்கீழ் நாடு உறு தியான பொரு ளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறியது. அவர் நீண்ட ஆயு ளுடன் வாழ்ந்து தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும்’ என கூறி யுள் ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், ‘நாட்டை கட்டமைப்பதற்காக அவரது தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் வியக்கத்தக்க பங்களிப்பு ஆகியவற்றை ஒப்புக்ெகாள்வோம். அவரது பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் நீண்ட ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், “ மன்மோகன்சிங்கின் அறிவுரையை இந்த அரசு கேட்க வேண்டும். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வழியை யாராவது காட்ட முடியும் என்றால் அது டாக்டர் மன்மோகன் சிங் மட்டும் தான்,’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: