சரியான நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்தால் டெங்குவை எளிதாக குணப்படுத்திட முடியும்: சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது. காய்ச்சல் வந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வீட்டில் உள்ள மருந்தை கொடுக்காதீர்கள். காய்ச்சல் குணமாக்குவது போல் தெரிந்தாலும் 4 நாட்களில்மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.

சரியான நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்தால் டெங்குவை எளிதாக குணப்படுத்திட முடியும். காய்ச்சலுடன் நீர்சத்து குறைந்தால் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள். பிற இடங்களில் சிகிச்சை பெற்றுவிட்டு இறுதியாக அரசு மருத்துவமனைக்கு வரும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என கூறினார். மேலும் பேசிய அவர்;  நீட் தேர்வில் ஆள்மாறாட்ட  முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத உள்ளோம்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தினால் ஆள்மாறாட்டத்தை தடுக்க முடியும். நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். கைரேகையை ஒப்பிட்டு பார்த்த பின்பே மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: