செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ், குரோஷியாவின் போர்னா் கோரிக் ஆகியோர் மோதினர். போட்டியின் போது டானிலின் வேகமான சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல் போர்னா திணறினார். முடிவில் உலகின் 4ம் நிலை வீரரான டானில், 14ம் நிலை வீரர் போர்னாவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.