5ம் வகுப்புக்கே கோச்சிங் மையங்கள் பெருகி விடும்: அருமைநாதன், தமிழ்நாடு மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க மாநில தலைவர்

மாணவர்கள், பெற்றோர்கள் வீட்டில் சும்மா இருக்கக்கூடாது. அவர்கள் நிம்மதியாக தூங்கக்கூடாது என்று நினைக்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அது தான் உண்மை. 5ம் வகுப்பில் இருந்தே  பொதுத்தேர்வுக்கு போகிறார்கள் என்று சொல்லி மாணவர்களை டென்ஷன் ஆக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி பெற்றோர்கள் டென்ஷன் ஆகிறார்கள். இதை பார்த்து ஆசிரியர்களும் டென்ஷன் ஆகின்றனர். பெற்றோரும், ஆசிரியரும் ேசர்ந்து மாணவருக்கு அழுத்தம் கொடுப்பார்கள். மாணவர்கள் விளையாட  முடியாது; நிம்மதியாக தூங்க முடியாது; அந்த அளவுக்கு  பொதுத்தேர்வு வருது, வருது என்று படிக்க சொல்வார்கள். பெற்றோர்களோ  பாவம்; ‘ நாம் எப்படி சொல்லி தர முடியும்’ என அந்த மாணவர்களை கோச்சிங் வகுப்புக்கு அனுப்புவார்கள்.

 ஐஐடி, நீட் தேர்வு கோச்சிங் மையம் அமைக்கப்பட்டது. இப்போது 5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கும் கோச்சிங் மையம் வந்து விடும். சாதாரண வீட்டு பிள்ளைகள் கோச்சிங் கொடுத்து படிக்க வைக்க முடியாது. ஒழுங்கா வேலை பார்த்து விட்டு  பள்ளியில் வந்து படிக்கும் பிள்ளைகள் கோச்சிங் செல்ல முடியாமல் பரீட்சையிலும் தேர்ச்சி பெற முடியாமல் அவமானப்பட்டு பள்ளியில் இருந்தே வெளியேறி விடுவார்கள். நல்ல வசதியான பிள்ளைகள் மட்டும் படித்து தேர்ச்சி பெறட்டும்.  அவர்கள் தொடர்ந்து படித்தால் போதும் என்று அரசு நினைக்கிறது. கடைசியில் மேட்டுகுடி பிள்ளைகள் எந்தவிதமான போட்டிகள் இல்லாமல் உயர்கல்விக்கு போவார்கள். இது தான் நடக்கும்.

தற்போது பள்ளிகளில் இடைநிற்றல் என்ற நிலை இல்லை. குறைந்து போய் விட்டது என்று அரசு கூறுகிறது. 5ம் வகுப்பு, 8ம்வகுப்பு பொதுத்தேர்வு வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 5ம் வகுப்பு பரீட்சை வைத்தால் பெற்றோர்கள், ஆசிரியர்கள்  படிக்க வைக்க கஷ்டப்படுவார்கள். அந்த குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்றால் என்னவென்று தெரியாது. இப்போது இருக்கிற பிள்ளைகள் சின்ன அவமானத்தை தாங்கி கொள்ள முடிவதில்லை. பள்ளியை விட்டு செல்ல போகிறார்கள். இல்லை  வீட்டை விட்டு ஓடி போய் விடுவார்கள்.பிள்ளைகளின் திறமையை அதிகரிக்க பொதுத்தேர்வு வைப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே, காலாண்டு, அரையாண்டு, மாதிரி வைத்து ரேங்க் கார்டு கொடுக்கின்றனர். பொதுத்தேர்வு வைப்பதால் தான் அவன் திறமையானவன் என்று சொல்ல  முடியாது. வகுப்பு ஆசிரியர் ஒரு மாணவன் திறமை என்ன, அவரை மேம்படுத்துவது எப்படி என்பது அவருக்கு தெரியும்.  பொதுத்தேர்வு வைத்து தான் ஒரு மாணவன் திறமையானவன் என்று சோதிக்க முடியாது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பொதுத்தேர்வு என்பதை அரசு ஏற்றுக்கொள்ளக்  கூடாது. அமைச்சர் செங்கோட்டையன் கூட பொதுத்தேர்வு இல்லை எனக்கூறினார். ஆனால், எங்களது சங்கம் சார்பில் செயலாளரை சந்தித்து கேட்டால் அவர் மத்திய அரசின் முடிவு  என்கிறார். மத்திய அரசு சொல்வதை செய்யும் அரசாக  உள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்களையோ, கல்வியாளர்களையோ கலந்தாலேசிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். வசதியான பிள்ளைகள் மட்டும் படித்து தேர்ச்சி பெறட்டும். அவர்கள் தொடர்ந்து படித்தால் போதும் என்று அரசு நினைக்கிறது. வசதியில்லாத குழந்தைகள் பின்தங்கி, பின்தங்கி பள்ளியை விட்டு சென்று

விடுவார்கள்.

Related Stories: