மதுரை, திருச்சி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வேளாண்மை துறைக்கு 133 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை: மதுரை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில் மொத்தம் 133 கோடியே 62 லட்சம் செலவிலான வேளாண்மை துறை  கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ₹19 கோடியே 37 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.  மேலும், திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகம், திருச்சி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் படிப்பு மையங்கள், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை மாணவர் விடுதி கட்டிடம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறு ஆராய்ச்சி மையத்தில் மாணவியர் படிப்பு மையமும் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.  

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளர் அலுவலகத்துடன் கூடிய வகுப்பறை மற்றும் பரிசோதனை கட்டமைப்புகள், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 133 கோடியே 62 லட்சம் செலவிலான வேளாண்மை துறை கட்டிடங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை ஆணையர் எஸ்.ஜே.சிரு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: