அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமும் திவால்

புதுடெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமும் திவால் ஆனதாக அறிவித்துள்ளது.  அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ₹46,000 கோடி கடன் நெருக்கடியில் சிக்கியது. சொத்து விற்பனை மூலம் கடனை அடைக்க முடியாததால், ரிலையன்ஸ் நிறுவனம் திவால் ஆனதாகவும், எனவே திவால் நடவடிக்கைக்கு தயார் எனவும் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.

 இதை தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் ஜிசிஎக்ஸ் லிமிடெட் (குளோபல் கிளவுட் எக்ஸ்சேஞ்ச்) நிறுவனமும் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து திவால் நடவடிக்கைக்காக விண்ணப்பித்துள்ளது.
Advertising
Advertising

 இந்த நிறுவனத்தின் 35 கோடி மதிப்பிலான பத்திரங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதிர்வடைந்து விட்டன. ஆனால், முதலீட்டாளர்களுக்கு இந்த முதிர்வு தொகையை வழங்க முடியவில்லை. முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை தாமதமாக வழங்குவது தொடர்பாக கடந்த ஜூலை மாதமே அவர்களுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.  இருப்பினும் முதிர்வு தொகையை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஜிசிஎக்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு தற்போது விண்ணப்பித்துள்ளது.  அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்குதான் ரபேல் தயாரித்துக் கொடுக்கும்  ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: