பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இருந்து அவரது மருமகள் கதறி அழுத படி வெளியேறிய புகைப்படம்

பீகார்: பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இருந்து அவரது மருமகள் கதறி அழுத படி வெளியேறிய புகைப்படம் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், 30 வயதான இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

ராஷ்டிரிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயை தேஜ் பிரதாப் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 6 மாதங்களிலேயே விவாகரத்து கோரி குடும்ப னால நீதிமன்றத்தை தேஜ் பிரதாப் அணுகினார். ஆனால் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரு வீட்டார்களும் ஐஸ்வர்யா ராயை தேஜ் பிரதாப் உடன் லாலு பிரசாத் யாதவ் வீட்டிலேயே தங்க வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் கையில் சூட் கேஸுடன் கதறி அழுதபடி லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் கடந்த மாதம் தேஜ் பிரதாப் மீது புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் தற்போது தேஜ் பிரதாப் போதைக்கு அடிமையானவர் என்றும் தன்னை சிவனின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பலவகை போதைப்பொருட்களை உட்கொள்ளுவதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

Related Stories: