திருவிருத்தான்புள்ளி நாராயணசாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வீரவநல்லூர்: திருவிருத்தான்புள்ளி ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சேரன்மகாதேவி அடுத்த திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்து வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணிப் பெருந்திருவிழாவானது கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6 மணிக்கு இனிப்பு தர்மம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது. திருவிழாவில் இன்று (8ம் தேதி) இரவு 8 மணிக்கு அய்யா நாகத் தொட்டில் கிருஷ்ணன் கோலத்தில் ஊஞ்சலாடும் வைபவம், வரும் 12ம் தேதி இரவு ஜி.என்.சிவச்சந்திரன் அருளிசை வழிபாடு,

13ம் தேதி அய்யா குதிரை வாகனத்தில் வீதியுலா, 14ம் தேதி அனுமன் வாகனத்தில் ராமர் அலங்காரத்திலும், 16ம் தேதி இந்திர வாகனத்தில் வைகுண்ட ராஜா அவதாரத்திலும் வீதியுலா நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை மற்றும் தர்மம், பகல் 12 மனிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, தர்மம், மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசிப்பு, இரவு 7 மணிக்கு அய்யாவுக்குப் பணிடை, அன்னதர்மம் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை அன்புக் கொடிமக்கள், ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கல் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Related Stories: