ரயில்வே பாதை முழுவதும் தங்கு தடையின்றி சேவை 1680 டவர் அமைக்க அனுமதி கோரும் செல்போன் நிறுவனம்

பயணிகள் சேவை, ரயில்கள் இயக்கம், முன்பதிவு, தகவல் பரிமாற்றம் என அனைத்திற்கும் தொலை தொடர்புகள் சேவை ரயில்வே துறைக்கு அவசியம். இதை எப்படி ரயில்வே கையாள்கிறது? கண்ணாடி ஒளியிழை கேபிள் இணைப்புகள் நாடுமுழுவதும் ரயில்வேக்கு உள்ளதா? அல்ல தனியார் நிறுவனங்கள் இதில் ஆதிக்கம் செலுத்துகிறதா? என்பது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியதாவது, முன்பதிவு, சரக்கு வர்த்தகம், ரயில் இயக்கம், சிக்னல் தொடர்புகள், தகவல் தொடர்புகள் ரயில்நெட் மூலமாகவே மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் இடையே நெருங்கிய உபயோகிப்பாளர்கள் குழு (சி.யு.ஜி ) செல்போன் சேவையினை மட்டும் நடப்பு 2019ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கிட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருக்கிறது.நான்கு வித கட்டண திட்டங்களில் 3.78 லட்சம் சேவையை வழங்க இருக்கிறது. இந்த சேவையை இதற்கு முன்பு பாரதி ஏர்டெல் நிறுவனம் ரயில்வேக்கு வழங்கி வந்தது. 1.95 லட்சம் இணைப்புகள் ரயில்வேக்கு தந்து ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த 31 டிசம்பர் 2018 இதன் ஒப்பந்தகாலம் நிறைவடைந்தது.

127 ரயில் டெல்டவர்களை முதல் கட்டமாக வாடகைக்கு ஜியோ கோரியதில் 76 இடங்களை ரயில்வே வழங்கியது. அதில் 51 இடங்களில் சேவையினை கடந்த ஜூலை முதல் வாரம் ஜியோ துவக்கியது. மற்ற இடங்களில் சேவையை துவங்க கடந்த ஜூன் மாதம் ரயில்வே வாரிய உறுப்பினர் (சிக்னல் மற் றும் தொலைத் தொடர்பு ) காசிநாத் மற்றும் ரிலையன்ஸ் அதிகாரி கபில்கபூர் , ரயில்வே தொலைத் தொடர்பு இயக்குனர் உமேஸ் பலோன்டா, ரயில் டெல் நிறுவன தலைமை அதிகாரி புயுனிட் சவுளா இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்காலிகமாக மொபைல் டவர் இணைப்புகள் (செல் ஆன் வீல்) மூலம் உடனடியாக ஜியோ சேவை துவங்க ரயில்வேயின் கண்ணாடி ஒளியிழை கேபிள் சந்திப்புகளில் இருந்து இணைப்பு வழங்கிட குத்தகை அடிப்படையில் அனுமதி கேட்டது. ரயில்வே அதை ஏற்றுக் கொண்டு இருக்கிறது. மேலும் 1680 ரயில்வே இடங்களில் டவர் அமைக்கவும் ஜியோ நிறுவனம் அனுமதி கோரி இருக்கிறது. இதன் மூலம் 99 சதவீத ரயில்வே பாதைகளில் ஜியோ சேவை தங்குதடையின்றி வழங்க முடியும்.

கடந்த 2017-18ம் நிதியாண்டு வரை 48456 கி.மீ தூரம் கண்ணாடி ஒளியிழை கேபிள்களை ரயில்வே பாதைகளில் ரயில்டெல் பதித்து இருக்கிறது.

இது 400 முக்கிய நகரங்களை இணைக்கிறது. இதுதவிர திரிபுரா, மேகலாயா, மணிப்பூர், மிசோரம் , நாகலாந்து அருணாச்சலபிரதேச மாநிலங்களில் 10,782 கி.மீ தூரம் பாரத்நெட் திட்டத்திற்காக ரயில்வே பாதைகளில் ரயில்டெல் கண்ணாடி ஒளியிழை கேபிள் பதித்து இருக்கிறது. மேலும் நடப்பு 2019-20 நிதியாண்டு 7600 கி.மீ தூரம் பதித்தும் வருகிறது. ரயில்டெல் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரயில் நிலையங்களில் இலவச வைபை வழங்கி வருகிறது.ரயில்வேயின் கண்ணாடி ஒளியிழை கேபிள் கட்டமைப்பு பலமானது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரயில்வேயில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு குறைவு. ஜியோ செல்போன் சேவை விரிவுபடுத்த கேபிள் பயன்படுத்துவதால், ரயில்வே துறைக்கு தான் சியூஜி போன் செலவு குறையும். 127 ரயில் டெல்டவர்களை முதல் கட்டமாக வாடகைக்கு ஜியோ கோரியதில் 76 இடங்களை ரயில்வே வழங்கியது. அதில் 51 இடங்களில் சேவையினை கடந்த ஜூலை முதல் வாரம் ஜியோ துவக்கியது.

Related Stories: