கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே விபத்து 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாணவி, சிறுவன் சாவு; 5 பேர் காயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே 100 அடி பள்ளத்தில்  கார் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கல்லூரி மாணவி,  சிறுவன் பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், நாயுடுபுரத்தை சேர்ந்தவர்கள் ரஹ்மத்துல்லா (41), சாதிக் (41). உறவினர்களான இருவரும் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். இருவரது குடும்பத்தினரும் நேற்று முன்தினம் வத்தலக்குண்டுவில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றனர். திருமணத்தை முடித்துவிட்டு திருச்சி கல்லூரியில் படிக்கும் சாதிக் மகள் ரூபிதா ஷெரீனை (18) விடுமுறைக்காக கொடைக்கானல் அழைத்து சென்றனர்.

Advertising
Advertising

காரை ரஹ்மத்துல்லா ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ரூபிதா ஷெரீன், ரஹ்மத்துல்லா மகன் ராசிக் பரித் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரஹ்மத்துல்லா, அவரது மனைவி ஜமருன்னா (38), சாதிக் (41), இவரது மனைவி மருநிஷா (39), மகள் சாமுரா பாத்திமா ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து கொடைக்கானல் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பின் 5 பேரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: