திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக கொச்சியில் இருந்து 688 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் வருகை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக கொச்சியில் இருந்து 688 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்குள்ள 14 வட்டாரங்களில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பில் வைக்கும் முயற்சியில் வேளாண் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொச்சியிலிருந்து 688 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரம் ரயில் மூலம் திண்டுக்கல் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கிருந்து லாரிகள் மூலம் கொடைக்கானல், வத்தலக்குண்டு, பழனி ஆகிய பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1,264 டன் உரம் சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அனைத்து தனியார் விற்பனை மையங்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் உரம், யூரியா மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 200 டன் உரம் இருப்பு குடோனிற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. மீதமுள்ள அனைத்து உரங்களும் அந்தந்த விற்பனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: