பசுமைத் தாயகம் சார்பில் பரப்புரை ராமதாஸ் துவக்கி வைத்து சிறப்புரை: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: காலநிலை மாற்றத்தின் தீமைகள் குறித்து பசுமைத் தாயகம் சார்பில் பரப்புரை நாளை பாமக நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் என்று பாமக தலைவர் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பரப்புரை இயக்கம் பசுமைத் தாயகம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Advertising
Advertising

சென்னை வள்ளுனர் கோட்டம் அருகில் நாளை, செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாமக மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பின் நிறுவனர் ராமதாஸ் காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடனத்தை வெளியிட வலியுறுத்தும் பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்து, காலநிலை மாற்றம் பற்றி சிறப்புரையாற்றுகிறார். இதில் தலைவர் ஜி.கே.மணி மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். உலகைக் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய உன்னத கடமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பரப்புரையில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Related Stories: