ஏரி, குளங்கள் தூர் வாரும் பணியை கடலூர் ஆட்சியர் பார்வையிட்டார்

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரதராஜன்பேட்டை பெருமாள் கோயில் குளம், வரதராஜன்பேட்டை மன்னார் குளம், பெரியகோயில் குப்பம் சின்ன சித்தேரி குளம் மற்றும் தீர்த்தகுளம், பூதம்பாடி சென்பம் ஏரி, கோரணப்பட்டு ஊராட்சி பேக்காநத்தம் நத்தமுட்டான் ஏரி ஆகியவற்றை ஆட்சியர் நடந்து சென்றே பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 80 சிறுபாசன குளங்கள், 1363 குளம், குட்டைகள் தூர்வாரப்பட உள்ளன.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சியின்கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை தூர்வார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில் சில கிராமங்களில் ஆக்கிரமிப்புகளை அது இருக்கும் இடம்தெரியாமல் ஆக்கிரமிப்பாளர்

களால் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற நீர்நிலைகளைகண்டறிய கிட்டதட்ட 10.கி.மீ தூரம் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், வட்டாட்சியர்மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் நடந்து சென்று ஆய்வு செய்யப்பட்டது என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்காஞ்சனா, உதவி செயற்பொறியாளர் (குறிஞ்சிப்பாடி) ரமேஷ், வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: