எதையும் சமாளிக்க ராணுவம் தயார் ராவத் நம்பிக்கை

புதுடெல்லி: காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எதையும் சமாளிக்க இந்தியப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதிகளில்  பாகிஸ்தான் கூடுதல் ராணுவத்தை குவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ``ஏதாவது தவறாக நடக்கும் பட்சத்தில், அதனை சமாளிக்க நமது வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அனைவரும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போல், பாகிஸ்தானிலும் முன்னெச்சரிக்கையாக படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அது பற்றியே நாம் சிந்தித்து கொண்டிருக்கக் கூடாது’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: