மண்டேலா என் மாமா பிரியங்கா உருக்கம்

புதுடெல்லி: ‘‘நான் அரசியலுக்கு வரவேண்டுமென முதலில் என்னிடம் சொன்னவர் நெல்சன் மண்டேலா’’ என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக போராடி 26 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. அந்நாட்டின் முன்னாள் அதிபரான அவரது 101வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் பொதுச்  செயலாளர் பிரியங்கா காந்தி, நெல்சன் மண்டேலா குறித்த தனது நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்த உலகத்திற்கு நெல்சன் மண்டேலா போன்றவர்கள் முன்பை விட இப்போதுதான் அதிகம் தேவை.  உண்மை, அன்பு, சுதந்திரத்திற்கான முன்மாதிரி அவர். எனக்கு அவர் நெல்சன் மாமா (நீ அரசியலுக்கு வரவேண்டுமென நீண்டகாலத்திற்கு முன்பே என்னிடம் கூறியவர்). அவர் எப்போதுமே எனக்கு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும்  இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2001ல் தனது மகனை மண்டேலா தூக்கி வைத்திருக்கும் புகை ப்படத்தையும் பிரியங்கா பகிர்ந்துள்ளார்.

Related Stories: