பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. ரவுண்ட் ஆப் 16 போட்டியில் ஜப்பான் அணியுடன் மோதிய நெதர்லாந்து அணி 2 -1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் லைகி மார்டென்ஸ் 17வது மற்றும் 90வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.