எம்பி மதன்லால் சைனி மறைவுக்கு இரங்கல் மாநிலங்களவை முதல் முறையாக அரை நாள் மட்டும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ராஜஸ்தான் பாஜ எம்பி மதன்லால் சைனி மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க மாநிலங்களவை அரைநாள் ஒத்திவைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில பாஜ தலைவரும், மாநிலங்களவை எம்பி.யுமான மதன்லால் சைனி, நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். லூகோமியா நோய் பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertising
Advertising

இதையடுத்து, நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் சைனிக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிிக்குப் பிறகு அவை நடவடிக்கைகள் தொடங்கின.முந்தைய காலங்களில் மாநிலங்களவை உறுப்பினர் இறந்தால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: