உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 1983 முதல் 2015வரை ஜிம்பாப்வே தொடர்ந்து வருகிறது. இந்த உலககோப்பையில் விளையாடும் வாய்ப்பை மயிரிழையில் ஜிம்பாப்வே தவறவிட்டது. ஆனால் அது குறித்து கவலைப்படாமல் உலக கோப்பையில் விளையாட உள்ள நாடுகளுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அயர்லாந்துடன் விளையாடிய ஜிம்பாப்வே இப்போது நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு தலா 2 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.டெவேன்டர் நகரில் முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைப்பெற்றது.