காவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்: தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: காவிரி ஓழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதி நடக்கவுள்ள நிலையில் காவிரி ஓழுங்காற்று குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா ஆகிய 4 மாநிலத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜூ, காவிரி தொழில்நுட்பகுழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தின் போது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் உத்தரவின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் காவிரியில் இருந்து திறந்துவிடவேண்டிய 9.9 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடக்கோரி வலியுறுத்தப்படவுள்ளது. மேலும், அணை பாதுகாப்பு, இதுவரை நீர் பங்கீட்டின் அளவு ஆகியவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இது தவிர அடுத்த மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 30 டி.எம்.சி தண்ணீரையும் உடனடியாக இந்த மாத காலதாமதம் போன்று இல்லாமல் விரைவாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழகத்தின் சார்பாக வலியுறுத்தப்பட உள்ளது.

Related Stories: