குருவாயூர் கோயிலில் பரிகார பூஜை

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலுக்குள் செருப்பு கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண்கள் வேட்டி அணிந்தும் பெண்கள் ேசலை அணிந்தும் மட்டுமே கோயிலுக்குள் செல்ல முடியும். செருப்பு அணிந்து செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும் 4 வாசல்களிலும் கோயில் பாதுகாவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் உட்பட தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் கோயில் கிணறு அருகே ஆண்கள் அணியும் செருப்பு கிடந்ததை பூசாரிகள் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ேகாயிலுக்குள் செருப்பு கிடந்ததால் பரிகார பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் சம்பவம்குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: