புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, பா.ஜ செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக அமித்ஷா தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சியில், மத்திய உள்துறை அமைச்சராக பா.ஜ தலைவர் அமித்ஷா நியமிக்கப்பட்டார். அதனால் கட்சி பொறுப்பை வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என அமித்ஷா கூறினார். ஆனால், அவர் தலைமையில்தான் பாஜ பல தேர்தல்களில் வெற்றி பெற்றது. அதனால் அவரிடம் இருந்து கட்சித் தலைவர் பதவியை பறிக்க தலைமைக்கு விருப்பமில்லை. அதனால் கட்சியின் பொறுப்புகளை கவனிக்க செயல் தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.