அபி ஷோடெக் டென்னிஸ் அக்‌ஷயா சாம்பியன்

சென்னை: அபி ஷோடெக் 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்  அக்‌ஷயா சாம்பியன் பட்டம் வென்றார்.அபி ஷோடெக் ரேங்கிங்  14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 200 சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜூன் 8, 9 தேதிகளில் நடைபெற்றன. முதன்மை சுற்றுப்  ேபாட்டி ஜூன்10ம் தேதி தொடங்கியது இந்நிலையில் சிறுமிகளுக்கான ஒற்றையர் பிரிவில் அக்‌ஷயா ரிவேரியா - பி.தன்யா ஆகியோர் மோதினர். அதில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அக்‌ஷயா வென்று சாம்பியன் ஆனார். அதேபோல் சிறுமிகளுக்கான இரட்டையர் பிரிவில் அக்‌ஷயா ரிவேரியா/மெர்லின் சுவிட்டி-பி.தன்யா/டி.வி.தேவ ஆகியோர் மோதினர். அந்தப்போட்டியில் அக்‌ஷயா/மெர்லின் இணை 7-5, 6-7, 10-2 என்ற செட்களில் போராடி வென்றது.சிறுவர்களுக்கான ஒற்றையர், இரட்டையர் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.

Advertising
Advertising

Related Stories: