ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த துணை குழுவானது காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பவானி சாகர் அணைக்கு வந்த அவர்கள் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன்முரளி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித்துறை அதிகரிகளிடன் விவரங்களையும் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்முரளி காவிரி ஆற்று படுகையில் எந்தெந்த பகுதிகளில் தானியங்கி நீர் அளவிட்டு மானி பொருத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு ஜூலை 31ம் தேதி ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்படுவதாகவும் குழுவினர் தெரிவித்தனர். காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைக்குழு கணக்கிட்டு வருகிறது.

Related Stories: