அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்

சென்னை : முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி, முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார். இவர் அதிமுகவின் முக்கிய நிர்வாகி தாமரைக்கனியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இன்பத்தமிழன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமைலான அமைச்சரவையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றினார்.

அதன் பின்னர் அதிமுகவில் இருந்து ஒதுங்கிய அவர், கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பின் திமுகவில் இணைந்தார். மேலும் 2009ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, தினகரன் தலைமைலான அமமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். தற்போது அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று இணைந்தார். அவருடன் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியம் உடன் இருந்தார்.

Related Stories: