75 மாவட்ட மருத்துவமனைகளை கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை

டெல்லி: நாடு முழுவதும் 3வது கட்டமாக 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ கல்லூரிகளே இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே முதல் கட்டமாக 58 மாவட்ட மருத்துவமனைகளும் இரண்டாவது கட்டமாக 24 மாவட்ட மருத்துவமனைகளும், மருத்துவ கல்லூரிகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக 3வது கட்டமாக 75 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் சுமார் 325 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்த திட்டம் செலவுக்காக நிதி கமிட்டி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி கமிட்டி ஒப்புதல் அளித்ததும் இந்த திட்டம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் மொத்தம் 157 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் உருவாகி, புதிதாக 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்களும் 8 ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்களும் கிடைக்கும்.

Related Stories: