முதல்வர் யோகி பற்றி செய்தி வெளியிட்டதற்காக உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் கைது

புதுடெல்லி:  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்க ள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியா டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து முதல்வர் யோகி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பிரசாந்த் கனோஜியா மீது லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கன்ச் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளியன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

யாரும் புகார் தராமல் போலீசாரே தாமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பிரசாந்த் கனோஜியா, செய்தி ஆசிரியர் மற்றும் நெய்டாவை சேர்ந்த தொலைக்காட்சியின் தலைவர் ஆகியோரை உத்தரப்பிரதேச அரசு கைது செய்ததற்கு இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் அமைப்பான  தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘போலீசாரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையான மற்றும் சட்டங்களை தவறாக பயன்படுத்தும் சர்வாதிகரமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: