ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பிரதமர் மோடி சந்திப்பு

பீஜிங்: கிர்கிஸ்தானில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. சுழற்சி அடிப்படையில் இந்த முறை கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பங்கேற்கிறார்.

அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் நேற்று  கூறுகையில், “வரும் 12 முதல் 16ம் தேதி வரை சீன அதிபர் ஜீ ஜின்பிங் கிர்கிஸ்தான்  மாகாணங்களை பார்வையிடுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்”  என்றார். சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சந்திக்கின்றனர். கடந்த ஆண்டு நிகழ்ந்த அலுவல் அல்லாத சந்திப்பு ஒன்றில் சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளின் நட்புறவில் ஒரு மைல்கல்லாக இருந்தது. அதன் பின்னர் நடக்கும் இந்த சந்திப்பும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” என்றார்.

Related Stories: