குருவாயூரில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்... எடைக்கு எடை காணிக்கையாக தாமரை மலர்களை வழங்கினார்

குருவாயூர்: கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்துக்கு பின் தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களையும் பிரதமர் மோடி காணிக்கையாக செலுத்தினார். நரேந்திர மோடி கடந்த 30-ம் தேதி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன் பின்னர் முதன் முறையாக தற்போது கேரளாவுக்கு சென்றுள்ளார். கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் கேராளாவுக்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு கொல்லம் சென்றடைந்தார். அவரை மாநில ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய பிரதமர் மோடி, தற்போது குருவாயூர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடிக்கு கோயில் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து இறைவனுக்கு நன்றியை செலுத்தும் வகையில் துலாபாரம் கொடுத்தார். அதாவது எடைக்கு எடை தாமரை பூக்களை பிரதமர் மோ அளித்தார். மேலும் சுமார் ரூ.40,000 மதிப்புள்ள செவ்வாழை, மற்றும் நெய் போன்றவற்றையும் காணிக்கையாக பிரதமர் மோடி வழங்கினார்.

Related Stories: