குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குருவை சாகுபடியில் ஈடுபடலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் குடிநீர் மற்றும் மின்சாரம் குறித்த திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், மேட்டூர் ஆணை நீர்மட்டம் மிகக் குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல், குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வந்தால், மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார். முன்னதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாகவும் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்படாது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும், அவர் சொல்வது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்தார். தமிழகத்தில் நீர் தேவைக்கான அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது எனக்  கூறினார். மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை பெற்றுத் தருவோம் என கூறியுள்ளார். மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Related Stories: