அதிபராக பதவியேற்று 2 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு டிரம்ப் முதல்முறையாக பயணம்: ராணி எலிசபெத் விருந்து உபசரிப்பு

லண்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்று 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அதிபர் டிரம்ப் சென்றுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் முதல்கட்டமாக நேற்று அவர், இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்். அமெரிக்க அதிபராக கடந்த 2017ல் டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்த நாட்டுக்கு அவர் முதல் முறையாக பயணம் செய்கிறார். லண்டன் சென்ற டிரம்ப்புக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தின் சார்பில் விருந்து உபசரிப்புகள் நடந்தன. பயணத்தின் 2ம் நாளான இன்று டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்தித்து பேசுகிறார். இதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் வாவோய் நிறுவனத்திற்கு தடை விதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகிறது. பிரக்சிட் விவகாரத்தால் வரும் 7ம் தேதி பிரதமர் மே பதவி விலக உள்ளார். இந்த சூழலில் அதிபர் டிரம்ப்பின் இங்கிலாந்து பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு

டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கிலாந்தில்  பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பக்கிம்காம் அரண்மனைக்கு வந்த டிரம்ப்பை கண்டித்து சுற்றுப்புற பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடந்தன. டிரம்ப்பை கோபமான குழந்தையாக கிண்டலடிக்கும் வகையிலான அவரது உருவ பலூன்கள் பல இடங்களில் பறக்க விடப்படுகிறது.

Related Stories: