அதிமுகவுக்கு மந்திரி பதவி கிடைக்காது: கமல்ஹாசன் நம்பிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை விமானம் நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு, வாய்ப்பு இல்லை என்றுதான் பார்க்க முடிகிறதே தவிர, மறுக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக மக்களின் குரல், அந்த அவையில் கேட்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்காக நாங்களும் முயன்றோம். தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், 2ம் கட்டமாக அமைச்சரவை விரிவுபடுத்தும்போது, நிச்சயமாக தமிழகத்துக்கு இடம் கிடைக்கும் என்று பாஜ தலைவர்கள் கூறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவும் தேர்தல் வாக்குறுதிபோல் அமைந்துவிடுமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: