உலக கோப்பையில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல், தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் இருவரும் தலா 37 சிக்சர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 3 சிக்சர்களை தூக்கிய கேல், டி வில்லியர்சை 2வது இடத்துக்குத் தள்ளி 40 சிக்சர்களுடன் முதலிடத்தை தன்வசமாக்கிக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (31 சிக்சர்), பிரெண்டன் மெக்கல்லம் (நியூசி., 29), ஹெர்ஷல் கிப்ஸ் (தென் ஆப்ரிக்கா, 28), சச்சின் (இந்தியா, 27), ஜெயசூரியா (இலங்கை, 27) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.