பாரிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார்.