பாபா ராம்தேவ் கருத்துப்படி பிரதமர் மோடிதான் முதலில் ஓட்டுரிமையை இழக்க வேண்டும்: ஓவைசி டிவிட்டரில் தகவல்

ஐதராபாத்: ‘‘ராம்தேவ் கருத்துப்படி, பிரதமர் மோடி ஓட்டுரிமையை இழக்க வேண்டும்’’ என டிவிட்டரில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஒவைசி கூறியுள்ளார். யோகா குரு பாபா ராம்தேவ், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் மக்கள் தொகை 150 கோடியை தாண்டிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அந்த பெற்றோருக்கு ஓட்டுரிமை அளிக்கக் கூடாது. 3வது குழந்தை தேர்தலில் போட்டியிடவும், அரசு வேலையில் சேரவும் அனுமதிக்காத வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்’’ என்றார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, ‘‘ராம்தேவ் கருத்துப்படி பார்த்தால், பிரதமர் மோடிதான் முதலில் ஓட்டுரிமையை இழக்க வேண்டும். ஏனென்றால் அவர் 3வது குழந்தை’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: