பிரிஸ்டோல்: பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுக்கு 262 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.பிரிஸ்டோலில் நேற்று நடைப்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக், ஃபக்ஹர் ஜமான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள்தான் எடுத்தனர். முகம்மது நபி பந்து வீச்சில் ஜமான் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஆஸம் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 112 ரன்களுக்கும், இமாம் 32 ரன்களுக்கும், சோயிப் மாலிக் 44 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.