காஷ்மீரில் ஜாகிர் மூசா என்கவுண்டர் எதிரொலி : இணையதளம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி  ஜாகிர் மூசா நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அல்கொய்தா தீவிரவாதி அமைப்பின் ஆதரவில் இயங்கிய அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவராக  ஜாகிர் மூசா செயல்பட்டுவந்தார். ராணுவம், துணை ராணுவம், காஷ்மீர் போலீசார் இனைந்து நேற்று புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது  ஜாகிர் மூசா கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட  ஜாகிர் மூசாவிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், பணம், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மூடப்பட்டுள்ளது.

Related Stories: