டாமன், மே 24: டாமன் டையு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜ தொகுதியை கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் யூனியன் பிரதேசமான டாமன் டையுவில் உள்ள ஒரே தொகுதியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது.