ஜேஎப்-17 பாகிஸ்தானுக்கு தந்தது சீனா

பீஜிங்:  சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஒற்றை இன்ஜின் கொண்ட ஜேஎப் -17 ரக ேபார் விமானங்களை தயாரித்தன. 2007ல் இந்த விமானங்களை பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்திய  நிலையில், இந்த விமானத்தை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே கடந்த 2016ம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, ஜேஎப் 17 ரக போர் விமானங்களை புதுப்பிக்கும் பணியை கடந்தாண்டு நவம்பரில் சீனா தொடங்கியது.

Advertising
Advertising

இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட முதல் ஜேஎப்- 17 போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா நேற்று வழங்கியது. பழைய பாகங்கள் மாற்றப்பட்டு, தற்போதைய போர் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த போர்  விமானம், பாகிஸ்தான் விமானப்படைக்கு புதிய பலத்தை அளிக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: