ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கிர்கிஸ்தான் பயணம்

டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கிர்கிஸ்தான் நாட்டிற்கு சென்றார்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த இந்தியா, கடந்த 2017ம் உறுப்பினராக இணைந்தது. இதையடுத்து இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெஸ்கிதான், பாகிஸ்தானை ஆகிய எட்டு நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் இந்தியா, இம்மாநாட்டில் கலந்து கொள்வது இது 2வது முறையாகும்.

வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டிற்கான மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் Bishkek என்ற இடத்தில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் 8 உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். சர்வதேச மற்றும் அண்டை நாடுகள் இடையேயான பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதனிடையே கிர்கிஸ்தான் நாட்டு ஜனாதிபதி Sooronbay Jeenbekovவுடன் சுஷ்மா ஸ்வராஜ் இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: