புளியங்குடி லட்சுமி நரசிங்கபெருமாள் கோயில் யாகசாலை ஜுவாலையில் அதிசய உருவம்: பக்தர்கள் வியப்பு

புளியங்குடி: நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி நடந்த யாகசாலையில் அதிசய உருவம் காணப்பட்டதால் பக்தர்கள் வியப்படைந்தனர். புளியங்குடியில் லட்சுமி நரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில்  ஆண்டுதோறும் மே 17ம்தேதி நரசிம்ம ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி  இக்கோயிலில் கடந்த 17ம்தேதி ஜெயந்தி விழா, அன்றுமாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பூஜைகளை மீனாட்சிசுந்தரம்  என்ற அய்யப்பன் தலைமையில் குழுவினர் நடத்தினர்.  அப்போது யாகசாலையில் ஏற்பட்ட தீ ஜுவாலையில் நரசிம்மர் உருவம் போன்று அதிசயத்துடன் காணப்பட்டது.

 இதனை அங்கு கூடியிருந்த பக்தர்கள் அதிசயத்துடன் பார்வையிட்டு வழிபாடு செய்தனர். தகவல் அறிந்து கோயில் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் பக்தர்களும் உடனடியாக சென்று யாகசாலை ஜுவாலையில் காண்பட்ட அதிசய உருவத்தை கண்டு வணங்கி வழிபாடு செய்தனர் தொடர்ந்து நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Related Stories: