ஐஸ் ஹாக்கி போட்டியின் போது தடுமாறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின்: சமூக வளைதளங்களில் வைரல்

மாஸ்கோ: ஐஸ் ஹாக்கி போட்டியின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கீழே விழுந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்கேட்டிங் காலணிகளை அணிந்துகொண்டு விளையாடும் ஐஸ் ஹாக்கி போட்டிகளில் ரஷ்ய அதிபர் புடின் அவ்வப்போது பங்கேற்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சோச்சி நகரில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கிப் போட்டியில் புடினின் லெஜன்ட்ஸ் அணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷொய்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிரணியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் புடின் பங்கேற்ற அணி 14க்கு 7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஐஸ் ஹாக்கி போட்டி முடிந்த பின் ரஷ்ய அதிபர் புடின் பார்வையாளர்களை பார்த்த வண்ணம் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்ததுபோது தடுமாறி மைதானத்தில் விழுந்தார். அவர் எழுந்திருக்க சக வீரர்கள் இருவர் உதவி செய்தனர். இதைத் தொடர்ந்து புடின் சிரித்தபடியே ரசிகர்களுக்கு கையசைத்து விட்டுச் சென்றார். இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கீழே விழுந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: